மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், தெரு நாய்களின் அச்சுறுத்தலால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. இந்த இரயில் நிலையம் வழியாக தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. மேலும்
60-க்கு மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன.
இங்குள்ள பிளாட்பாரத்தில், தெருநாய்கள் ஆங்காங்கே திரிவதால் ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளும் அந்த பிளாட்பாரத்தில் செல்பவர்களும் அச்சத்துடன் செல்கின்றனர்.
இது மட்டுமல்லாது, ஒரு சில நாய்கள் அவர்களை பின் தொடர்வது பயத்தை உருவாக்குகிறது. எனவே சோழவந்தான் ரயில்
நிலைய பிளாட்பாரத்தில் திரியும் நாய்களை, அப்புறப்படுத்த வேண்டும் என்று, ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.