வாடிப்பட்டி அருகே தேங்காய்கள் ஏலம்.

72பார்த்தது
வாடிப்பட்டி அருகே தேங்காய்கள் ஏலம்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 7 விவசாயிகள் கொண்டு வந்த 21, 520 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 14. 35-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7. 65-க்கும் சராசரியாக ரூ. 8-க்கும் ஏலம் போனது. ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 480-க்கு மட்டையுடன் கூடிய தேங்காய் வர்த்தகம் நடந்தது.

அதனை தொடர்ந்து 12 விவசாயிகள் கொண்டு வந்த 1464. 9 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 7வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் அதிகபட்சமாக ரூ. 92. 50- க்கும் குறைந்தபட்சமாக ரூ. 67-க்கும், சராசரியாக ரூ. 79-க்கும் ஏலம் போனது. ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 281-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 87 ஆயிரத்து 761-க்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

தொடர்புடைய செய்தி