மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு நேற்று முன்தினம் (டிச. 27) நடைபெற்றது. தமிழ் துறை தலைவர் இராமர் வரவேற்க, முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். மதுரை கல்லூரி பேராசிரியர் கண்ணன் 'பாசம் பரஞ்சோதிக்கு' என்னும் தலைப்பிலும், கவிஞர் செல்லா 'ஆண்டாள் தமிழும் வழிபாட்டு மரபும்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.