மதுரை மாவட்டம்
சோழவந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்று (ஜூன். 3) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது. கொடி யேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலில் பின்னர் உள் பிரகாரத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது
அப்போது கூடியிருந்த பொது மக்கள் பக்தர்கள் பெண்கள் பக்தி பரவசத்தில் சாமி ஆடினார்கள். திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னி சட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணிஅளவில் மந்தைகளத்தில் பூக்குழியும் 17ஆம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18ம்தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச் சியும் நடைபெற உள்ளது. நேற்று கொடியேற்றியவுடன் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.