சோழவந்தான்: மின்னொனியில் ஜொலிக்கும் ஜெனகை மாரியம்மன் கோவில்

53பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று (ஜூன் 2) இரவு நடைபெறுவதை முன்னிட்டு கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இன்று தொடங்கும் திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் தினமும் இரவு சுவாமி ஊர்வலம் மண்டகப்படி தாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னி சட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மந்தைகளத்தில் பூக்குழியும், 17ஆம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18ம் தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி