மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர், டி. மேட்டுப்பட்டி, கொழுஞ்சிப்பட்டி, கெங்கமுத்தூர், கோணப்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி, சரந்தாங்கி, மறவபட்டி, வலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக பல்வேறு தானியப் பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விதைப்பு செய்யப்பட்ட மொச்சை செடிகள் அவ்வப்போது பெய்த கனமழை காரணமாக நன்கு பூத்து காய் காய்த்துள்ளது. தற்போது நன்கு விளைந்த நாட்டு மொச்சை காய்கள் அறுவடை செய்து விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் மொத்த விலைக்கு கிடைக்கிறது. சில்லறை விலைக்கு ரூபாய் 100 வரை விற்பனையாகி வருகிறது. மொச்சைக்காய் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்து விடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.