மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 9 நாள் நடந்தது. ஒவ்வொரு நாளும் வேறுவேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 4ம் நாள் திருவிளக்கு பூஜை, 7ம் நாள் பூ சொரிதல் விழா, 8ம் நாள் சக்தி கரகம் எடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்தனர். 9ம் நாள் காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, கரும்புத்தொட்டில் மற்றும் ஆயிரங்கண் பானை பக்தர்கள் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம், இரவு முளைப்பாரி ஊர்வலம், அதிகாலை பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கலை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.