ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வர தாமதம்

61பார்த்தது
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில்தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம் பக்தர்கள் வேதனை.




மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடி
யேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்
சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சோழவந்தான் பெரிய கடை வீதியில் தொடங்கிய,
தேர் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி சின்ன கடை வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் வழியாக மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும்.
காலை 8: 30 மணிக்கு தொடங்கும் தேரோட்ட நிகழ்ச்சியானது 11: 30 மணி அளவில் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்வது வழக்கம் ஆனால், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டை மறித்து கடைகளை கட்டி இருப்பதாலும் சாலையின் நடுவில் கடைகள் இருப்பதாலும் தேர் வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி