மதுரை, சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பேட்டை பகுதியில் இலவச கழிப்பறை கேட்டு அப்பகுதி கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சோழவந்தான் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட ஈஸ்வரி ஸ்டாலின் தான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச கழிப்பறை உடனடியாக கட்டி தரப்படும் என, வாக்குறுதி கொடுத்திருந்தார். இதன் பேரில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு,
ரூபாய் 24 லட்சம் செலவில், புதிதாக இலவச கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பேட்டை கிராமத்தில் நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், பொதுக்
குழு உறுப்பினர் ஸ்ரீதர்,
துணைத் தலைவர் லதா கண்ணன் , வார்டு உறுப்பினரும் பணி நியமனக்குழு உறுப்பினருமான ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும் ஒப்பந்தக்காரர் பாலாஜி
அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.