மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை சேர்ந்த கவுண்டன்பட்டி வடக்குத் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஹரிகேசவன் (46) என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருக்கு சிறுநீரக நோய் பிரச்சினையும் உள்ளது. இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் அலங்காநல்லூர் வருவாய்த்துறை அலுவலகம் அருகே இறந்துகிடப்பதாக இவரது மனைவி முருகேஸ்வரிக்கு தகவல் கிடைக்கிறது. இதுகுறித்து அவர் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.