மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் நான்கு வகுப்பறைகளை கொண்ட புதிய பள்ளிக்கட்டிடம் ரூபாய் 81 லட்சத்தில் கட்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்ட பூமிபூஜை நேற்று (பிப். 3) நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் தனராஜ் பரந்தாமன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் பாலமேடு பேரூராட்சி செயலாளர் மனோகரவேல் பாண்டியன் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியன் யூனியன் ஆணையாளர் வள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம் பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்ட பூமிபூஜை நேற்று (பிப். 3) நடைபெற்றது. சரந்தாங்கி கிராமத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக்கட்டிடம் ரூ. 81 லட்சத்தில் கட்டப்படவுள்ளது.