மதுரையில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று (மே 31) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் பங்கேற்றார். அப்போது, தனது வீட்டின் முன்பு நின்று, முதலமைச்சரை பேராசிரியர் சாலமன் பாப்பையா அன்போடு வரவேற்றார். அவரிடம் பேசிவிட்டு முதலமைச்சர் அங்கிருந்து சென்றார். கூடியிருந்த பொதுமக்களும் முதலமைச்சருக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.