இன்றைய சமூகத்தில், பல இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக விபரீதமாக ஆபத்தான விஷயங்களைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், ரயில் தண்டவாளத்தில் ஒரு இளம் காதல் ஜோடி செய்த ரீல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருவருக்கும் குறைந்தது 13 அல்லது 14 வயது கூட ஆகவில்லை. வயதிற்கேற்ப காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மற்றவர்கள், இந்த வயதில் இது தேவையா என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.