தங்களின் விருப்பத்துக்கு எதிராக காதல் திருமணம் செய்த பெண் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ட்விங்கிள் (22), டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த தீபக் காதலித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு தற்போது ஒரு 11 மாத குழந்தை இருக்கிறது. இதனிடையே, காதல் திருமணம் செய்த அக்காவின் மீது ஆத்திரத்தில் இருந்த மைனர் சிறுவனான ட்விங்கிளின் தம்பி, தனது அக்கா, அக்கா மகனை கொலை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்துள்ளனர்.