கனடாவைச் சேர்ந்த டேவிட் ஷெர்கின் என்பவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இவருக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் 3 முறை லாட்டரி அடித்துள்ளது. இதில், அவர் மொத்தமாக ரூ.15.6 கோடியை பரிசாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “"நான் புற்றுநோயில் இருந்து தப்பியவன். இவ்வளவு பணம் கிடைத்தாலும், நான் மீண்டும் லாட்டரி டிக்கெட்டை வாங்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.