தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனாலும் பல்வேறு நுாதன முறையில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரிகளை விற்பனை செய்ததாக தலைமை காவலர் பிரகாஷ், பாலாஜி, கனி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகாஷ் மாமூல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.