மகாராஷ்டிராவின் ஜல்னா நகரில் திங்கள்கிழமை ஒரு சோகமான சம்பவம் நடந்தது. பாபுராவ் காலே சவுக்கில் பைக்கில் சென்ற ஒருவர் திடீரென விழுந்தார். கீழே விழுந்த அவர் மீது லாரி மோதியது. அவர் தலைக்கு மேல் லாரி ஒன்று ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் அந்த நபரின் தலை நசுங்கியது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.