லாரி விபத்து.. சமையல் எண்ணெய்யை குடத்தில் பிடித்த மக்கள்

80பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த எண்ணெய்யை பொதுமக்கள் குடத்தில் பிடித்துச் சென்றுள்ளனர். புதன்சந்தை அருகே 10,000 லிட்டர் சமையல் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்து கசிந்த சமையல் எண்ணெய்யை அப்பகுதி மக்கள் குடத்தில் பிடித்துச் சென்றுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி