HMPV வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு, வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில யூடியூப் சேனல்கள் 'லாக்டவுன்' என்ற தகவலை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், PIB-யின் உண்மை சரிபார்ப்பு குழு அத்தகைய எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை, மேலும் இதுபோன்ற விஷயங்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறியுள்ளது. அரசிடம் இருந்து வராத எந்த ஒரு தகவலையும் நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.