எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், உள்ளூர் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, முதல் 500 கி.மீ தூரத்திற்கு ரூ.300, 501-1,000 கி.மீ-ரூ.400, 1,001-1,500 கி.மீ.-ரூ.550, 1,501-2,500 கி.மீ.-ரூ.650, 2,501-3,500 கி.மீ.-ரூ.800, 3,500 கி.மீ.-மேல் ரூ.1,000 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இண்டிகோவின் இந்த கட்டண உயர்வை தொடர்ந்து, மற்ற விமான நிறுவனங்களும் விமான கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.