திருவள்ளூர்: வெங்கடாபுரத்தில் பல்லி இருந்த குச்சி ஐஸ் சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சி ஐஸில் பல்லி உறைந்து கிடந்த நிலையில் அதை சாப்பிட்ட 2 சகோதரர்களுக்கு வாயில் நுரை தள்ளியது. இது குறித்து ஐஸ் விற்பனை செய்த நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.