பாகிஸ்தான் நாட்டில் டிவி சேனல்
விவாதம் ஒன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் திடீரென கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட இருவர் கருத்து மோதல் ஏற்பட்டு திடீரென மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்கள் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்தினர். இருவரது மைக்கும் கனெக்ட் ஆகி இருந்த நிலையில், அவர்கள் பேசிய மோசமான கருத்துகளும் டிவி சேனலில் ஒளிபரப்பானது. இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.