முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, மதுவிலக்கை நோக்கிய படிப்படியான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, 17 புனித நகரங்களில் மதுவிலக்கை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் அனைவருக்கும் தெரியும். நமது இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்கள் கெட்டுப்போவதை நாங்கள் விரும்பவில்லை என கூறிய முதல்வர், இந்தக் கடைகள் வேறு எங்கும் மாற்றப்படாது என கூறியுள்ளார்.