மழை பெய்யும்போது ஏற்படும் மின்னல் சூரியனின் மேற்பரப்பை விட 5 மடங்கு அதிக வெப்பம் கொண்டது என்பது உங்களால் நம்ப முடியுமா? ஆம், ஒரு முறை ஏற்படும் மின்னலில் 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். காற்றில் பயணிக்கும் மின்னலில் உள்ள மின்சார வெளியேற்றம் உயர் வெப்பத்துக்கு காரணமாக அமைகிறது. இதனாலேயே மின்னல் மரத்தின் மீது விழுந்தால் நொடியில் எரிந்து வெடித்து சாம்பலாகிறது. மனிதர்களின் மீது விழும் மின்னலை சற்று கற்பனை செய்து பாருங்கள்.