எல்.ஐ.சி கட்டிடம் தென்னிந்தியாவிலேயே முன்பு உயரமான கட்டிடம் என்றுகூடச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை வருபவர்கள் தவறாமல் வந்து கண்டு வியக்கும் இடமாகவும் இருந்துள்ளது. அண்ணாசாலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. எல்.ஐ.சி. கட்டிடம் 1959-ல் இன்சூரன்ஸ் சென்னைப் பிரிவின் தலைமையிடமாக ஆனது. இதற்குப் பிறகு பல உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் இன்றும் தமிழகம் மற்றும் சென்னையின் அடையாளமாக திகழ்கிறது.