இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1972-ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப்பட்டு, 1974 முதல் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.