தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92ஆவது பிறந்தநாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அம்பேத்கர் என தமிழ்நாட்டின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாவம், புண்ணியத்தை பற்றி பேசுகிறார். அம்பேத்கர் பெயரையும் பெரியார் பெயரையும் ஒரு கோடி முறை முழங்குவோம், உச்சரித்துக்கொண்டே இருப்போம்" என்றார்.