தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றால் ரூ.1000 முதல் ரூ.12,000 வரை செலவாகும். ஆனால், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 30 வகையான நோய் கண்டறிதல் பரிசோதனைகளும், 20 வகையான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.