சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், "பல்வேறு எண்ணங்களின் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் மனதை ஆற்றுப்படுத்தி, போதிய ஓய்வின்றி அயர்ந்திருக்கும் உடலை வலுப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கும் அருமருந்தான யோகா உலகுக்கு நம் பாரதம் அளித்த கொடை. சர்வதேச யோகா தினமான இன்று, நாமும் யோகா பயிற்சியில் ஈடுபடுவோம், நோயற்ற பாரதம் உருவாக்குவோம்" என்றார்.