விசிக தலைவர் திருமாவளவனை உயிரைக் கொடுத்தாவது முதல்வராக்குவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "திருமாவளவன் முதல்வராக வரகூடாது என கூறுவதற்கு எல்.முருகன் யார்? எல்.முருகன் மட்டும் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகலாமா ? தமிழர் நிலத்தில் தமிழர் திருமாவளவன் முதல்வர் ஆக கூடாதா?" என்று ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.