நீலகிரி: குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தையை கண்டு கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் அமைந்துள்ள சாலையில் சிறுத்தைகள் மெதுவாக செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.