தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரியில் வழங்கிய நிலையில் அதன் மீதான விவாதம் இன்று (மார்ச். 17) நடக்கிறது. தற்போது சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.