பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பி.ஆர்.ஓ. நடராஜனை தொடர்புபடுத்தி அண்ணாமலை பேசியிருந்த நிலையில் அவர் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தனது பேச்சுக்கு அவர் சமூகவலைதளம் வாயிலாக மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.