மனிதர்களின் சிரிப்பு மொழிகளின் வளர்ச்சிக்கும் முன்பே உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், மொழிகள் உருவாகி சில லட்சம் ஆண்டுகளே இருக்கும். ஆனால், மொழிகள் உருவாகாமல் பரிணாம வளர்ச்சியில் இருந்தபோது மனிதர்களின் சிரிப்பும், சிம்பன்சிகளின் சிரிப்பும் அதிகம் ஒத்துப்போகிறது. குரங்குகளின் குரல் ஒலிகள் சிம்பன்சி, மனிதர்களின் சிரிப்புடன் ஒத்துப்போவதாக பிபிசி சயின்ஸ் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர் இல்லாத விலங்குகளிலும் சிரிப்பு பொதுவான வடிவமாக இருக்கிறது.