பறக்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு

70பார்த்தது
பறக்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு
சென்னையில் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் விமானத்தின் மீது லேசர் அடித்துள்ளனர். இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது. இருந்தபோதிலும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி