தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த 2 ஆண்டுகளில் 20,000 கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.