உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் தெஹ்ரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. தாயும் மகளும் உறங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் விழுந்ததில் 15 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் உத்தரகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த SDRF மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.