நீலகிரியில் நிலச்சரிவு?: எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

76பார்த்தது
நீலகிரியில் நிலச்சரிவு?: எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த வதந்திகளை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை ஆய்வு செய்ய இந்திய புவியியல் துறையினர் வரவுள்ளனர். அவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி