கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 400 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. NDRF, கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 225 பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.