திண்டுக்கல் ஆர்விநகரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் மார்கழி மாதம் 9ஆம் நாளை முன்னிட்டு நேற்று (டிச., 24) திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. விளக்கு வழிபாட்டில் பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108 நாம ஒலிகள் பாடி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.