நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், வடிகால்கள், நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் உபகரணங்கள் பெற்ற விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ள மானியத்தை விரைவாக பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.