குடியரசுத் தலைவரிடமிருந்து கேல் ரத்னா விருதை பெற்ற குகேஷ்!

80பார்த்தது
குடியரசுத் தலைவரிடமிருந்து கேல் ரத்னா விருதை பெற்ற குகேஷ்!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், இன்று(ஜன.17) குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து கேல் ரத்னா விருதை பெற்றார். 18 வயதே நிரம்பிய குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதையடுத்து அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி வீரர் ஹர்மன் பிரீத் சிங்க்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி