கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சமுக நல்லிணக்க ரமலான் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. வேப்பனஹள்ளி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நாகராஜ் தலைமையில் நடைப்பெற்ற இப்தார் நோம்பு நிகழ்விற்கு தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய முறைப்படி துவா தொழுகை முடிந்து கஞ்சி குடித்து நோம்பை நிறைவு செய்தனர். பின்னர் தொழுகை முடிந்து அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, இராயகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாதி மத வேறுபாடுகள் இன்றி ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.