பனைமரத்தில் வேன் மோதி டிரைவர் உயிரிழப்பு.

78பார்த்தது
பனைமரத்தில் வேன் மோதி டிரைவர் உயிரிழப்பு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆரம்புதூரை சேர்ந்தவர் தனபால் (35) சரக்கு வேன் டிரைவரான. இவர் நேற்று முன்தினம் இவர் குப்பம்-கிருஷ்ணகிரி சாலையில் வேனை ஓட்டி வந்து கொண்டிருந்தார். இவருடன் கிளீனராக அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (28) உடன் வந்தார். கம்மம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து வேன் சாலை ஓரத்தில் பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதகவல் அறித்த மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை மீட்டு உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி