ஊத்தங்கரை: மாணவிக்கு 10ஆயிரம் நிதியுதவி வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், அதியமான் மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியில், காரப்பட்டு அரசு மாதிரி பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2 இடம் பிடித்த மாணவி எம். பூவிதா விற்கு ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 27. 07. 2024 வாழ்த்துக்களை தெரிவித்து மாணவியின் பெற்றோர் முருகேசன், சந்தானலட்சுமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து தன் சொந்த பணத்திலிருந்து ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.