பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தன்குமார் யாதவ் (23). இவர் உளிவீரனப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்தது வருகிறார். இவரது சகோதரர் உத்தம்குமார் (19). கடந்த 22-ம் தேதி அன்று உத்தம்குமார் மற்றும் அவரது நண்பர் ஜிதேந்திரகுமார் (27) ஆகியோர் ரத்தன்குமார் யாதவ் வீட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ரத்தன்குமார் யாதவை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தம்குமார், ஜிதேந்திரகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.