கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் சம்பவம் அன்று மகராஜகடை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியல் ஈடுபட்டனர். அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை அவர்கள் சோதனை செய்தபோது அதில் 6 கிரானைட் கற்கள் குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது. இது தொடர்பாக அதிகாரி சரவணன் மகராஜகடை போலீசில் புகார் கொத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.