கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் பகுதிகளில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 5-ஆம் தேதி அன்று 'ஆஷாடா' என்ற ஆடி மாதம் துவங்கியது. இதனால் இந்த மாதத்தில் அவர்கள் எந்த சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை இதனால் ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 300-க்கு விற்ற 1 கிலோ சாமந்தி நேற்று ரூ. 200-க்கும், 60-க்கு விற்ற செண்டுமல்லி ரூ. 25-க்கும், 120-க்கு விற்ற பட்டன் ரோஜா ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.