பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூளகிரி வட்டார கல்வி அலுவலக முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 243 ரத்து செய்யக்கோரியும் , பதவி உயர்வினை ஒன்றிய அளவில் நடத்திட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைய வேண்டும், பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் அதாவது சரண்டர் தொகை , ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஏனைய 31 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சூளகிரி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தொடர் மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் சலீம், திருமலைக்குமார் , வரவேற்றார். டிட்டோஜாக் சூளகிரி வட்டார ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கல்வி மாவட்ட செயலர் ஜெபத்திலகர் , தலைமை ஏற்று கோரிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர். கோட்டை முத்து கோரிக்கை குறித்து பேசினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் தினகரன் மற்றும் தேவதாஸ் பாண்டியன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி