கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று(செப்-23ம் தேதி) கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய் கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக, ஒரு கிலோ 132- ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 92-ரூபாய்க்கும், மேலும் சராசரி விலையாக ரூ. 127-க்கு விற்பனையானது. இதில், 2, 932 கிலோ கொப்பரை ரூ. 3. 58 லட்சத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.